இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினாலும் சூரியகுமார், மற்றும் தீபக் ஹூடாவின் அட்டகாச பேட்டிங்கினாலும் பவுலிங்கில் செஹல், புவனேஷ்வர் குமார் அசத்தியதாலும் இந்திய அணி பெரிய வெற்றியை பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றது, ஆனால் கேட்ச்களை இந்தியா விட்டது, தினேஷ் கார்த்திக் கேட்ச்களை விட்டார்.
அடிப்படைகளை நம்பி ஆடினால் பெரிய பிரச்சனை இல்லை. பவர் ப்ளே பேட்டிங்கில் தெளிவாக இருக்க வேண்டும். இந்த 6 ஓவர்களில் எப்படி ஆட வேண்டும் என்பதை விவாதிப்போம், சில வேளைகளி அது சரியாக வரும் சில வேளைகளில் வராது. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் முதல் இப்போது வரை தன்னைத் தயார் படுத்திக் கொள்வது பிரமாதமான ஒரு விஷயம்.