டார்சி ஷார்ட் 2018-ம் ஆண்டு தனது அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவின் பல சாதனைகளை தகர்த்தார். உள்ளூர் போட்டி ஒன்றில் 148 பந்துகளில் 257 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் 24 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது. ஆஸ்திரேலியாவில் இது மிகப் பெரிய வரலாற்று சாதனையாகும்.