முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

IPL 2023: 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 • 17

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  சென்னை - மும்பை அணிக்கு இடையேயான போட்டியின்போது, களத்தில் மட்டுமன்றி பார்வையாளர் அரங்கிலும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.

  MORE
  GALLERIES

 • 27

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. சென்னை அணி 17.2 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

  MORE
  GALLERIES

 • 37

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் சுரேஷ் ரெய்னா. சின்ன தல என்று சென்னை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரெய்னா, திடீரென மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து, சென்னை வீரர் பதிரானாவுக்கு ரெய்னா ஆட்டநாயகன் விருதை வழங்கியபோது, ரசிகர்கள் உற்சாக மிகுதியில் அரங்கம் அதிரும்படி கரவொலிகளை எழுப்பினர்.

  MORE
  GALLERIES

 • 47

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  இதே போன்று தனுஷ், லோகேஷ் கனகராஜ், நயன்தாரா, விக்னேஷ் ஷிவன், அனிருத், வரலட்சுமி சரத்குமார் என சேப்பாக்கம் மைதானமே நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்தது.

  MORE
  GALLERIES

 • 57

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  தோனியின் மனைவி சாக்‌ஷியும் தனது குழந்தையுடன் வந்து போட்டியை கண்டு ரசித்தார்.

  MORE
  GALLERIES

 • 67

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  இதே போன்று, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சிறுவர்களுடன் அமர்ந்து போட்டியை பார்த்து மகிழ்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 77

  CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

  சென்னை - மும்பை அணிகள் சந்தித்த போட்டி பேசுபொருளாக மாறியதைப் போன்று, சேப்பாக்கம் மைதானத்தில் மற்றொரு சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றது. முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்தார். மைதானத்தில் உள் அரங்கில் உள்ள அறையில் இருவரும் 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  MORE
  GALLERIES