களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது
News18 Tamil | April 8, 2019, 9:23 AM IST
1/ 6
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6-ம் தேதி நடைபெற்றது.
2/ 6
இந்தப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
3/ 6
இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4/ 6
போட்டி முடிந்த பிறகே மைதானத்தில் கிடந்த குப்பைகளை சென்னை அணியின் Whistle Podu Army ரசிகர்கள் சுத்தம் செய்தனர்.
5/ 6
அவர்கள் மைதானத்தில் கிடந்த 10 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளைச் சுத்தம் செய்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
6/ 6
இந்த புகைப்படத்தை சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘ரசிகர்களின் இந்த முயற்சியை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்