கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் ரஜினி படத்தில் வில்லனின் மகளுக்கும் இடையே இம்மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் நடைபெறும் தேதி குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. ரஜினி நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படத்தில் வில்லனாக நடித்தவர் சுனில் ஷெட்டி. இவர் இந்தி திரையுலகில் மூத்த நடிகராக இருந்து வருகிறார். சுனில் ஷெட்டியின் அதியா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரது திருமணம் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளின் காதல் குறித்து கருத்து தெரிவித்த சுனில் ஷெட்டி, ராகுலை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சமூக வலைதளங்களில் பலமுறை புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இருவரின் ரசிகர்களின் விருப்பத்தை பெற்றிருந்தது. கடந்த சில மாதங்களாக ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் இம்மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திருமணத்தில் ரோகித் சர்மா விராட் கோலி தோனி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘ இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரிலிருந்து ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.