இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸை கொண்ட இந்திய இளம் கிரிக்கெட் வீரராக மாறியுள்ளார் ஹர்திக் பாண்ட்யா. இவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை இன்ஸ்டாகிராமில் 25 மில்லியனை தாண்டியுள்ளது. நாள்தோறும் பதிவிட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பில் உள்ளார். ஐபிஎல் தொடரில் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஐபிஎல் தொடரில் முக்கிய ஆட்டக்காரராக பாண்ட்யா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20-க்கும் அதிகமான பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராக உள்ளார் ஹர்திக் பாண்ட்யா. சமீபத்தில் தோனியுடன் இவர் இருக்கும் புகைப்படம் 5.6 மில்லியன் லைக்ஸை பெற்றது. ஹர்திக் பாண்ட்யா நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் முடித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இருவரும் கடந்த மாதம் பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.