முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளது.

  • 16

    இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

    பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்கு முன் இந்திய அணியில் இதுவரை 9 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் டெஸ்டில் களமிறங்கும் 11 வீரர்களை தேர்ந்தெடுப்பது நிர்வாகத்திற்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 26

    இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

    ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹனும விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தொடரிலிருந்து விலகி உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வயிற்றுப்போக்கு காரணமாக பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

    மேலும் ரவிசந்திரன் அஸ்வின், கே.எல்.ராகுல், மயங்க், அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.  சிட்னி டெஸ்டில் இறுதி நாளில் ரவிசந்திரன் அஸ்வின் முதுகு வலியுடன் மூன்றரை மணி நேரம் பேட்டிங் செய்தார்.

    MORE
    GALLERIES

  • 46

    இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

    காயம் காரணமாக விலகி உள்ள ஹனுமா விஹாரிக்கு மாற்று வீரராக இருந்த மயங்க் அகர்வாலுக்கும் வலைப்பயிற்சியின் போது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கே.எல்.ராகுலுக்கும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் விருதிமான் சஹா அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

    இதனால் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள முகமது சிராஜ் தலைமை வேகப்பந்து வீச்சாளராக இருப்பார். அவருடன் நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    இந்திய அணியில் 9 வீரர்களுக்கு காயம்... பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்?

    உத்தேச இந்திய அணி : சுப்மன் கில், ரோஹித் சர்மா (துணை கேப்டன்), புஜாரா, ரஹானே (கேப்டன்), ரிஷாப் பந்த், விரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷார்துல் தாக்கூர், டி நடராஜன், நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ்

    MORE
    GALLERIES