

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை ஆதாயம் பெறுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, உலகளவில் டாப் இடத்தில் உள்ள வீரராக அறியப்படுகிறார்.


ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் நடக்காத போதும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கிறார் விராட் கோலி


இந்த நிலையில், விராட் கோலி மீது மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி பரபரப்பு புகார் ஒன்றை பிசிசிஐ.யிடம் அளித்துள்ளார்.


விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து கொண்டு, சக வீரர்களின் வர்த்தக விவகாரங்களை கையாளும் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் அடங்கிய மற்றொரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இதன் மூலம் அவர் இரட்டை ஆதாயம் பெறுவதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்ஜீவ் குப்தா, கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினுக்கு புகார் அனுப்பி உள்ளார்.