இதற்கிடையே, கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே பிரச்னை வெடித்திருப்பதாக செய்திகள் கூறின. விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித் அன்ஃபாலோ செய்தது இதனை உறுதியாக்கியது. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், போலிகள் தோன்றினால் உண்மை மவுனமாகத்தான் இருக்கும் என்று ஸ்டேட்டஸ் பதிவிட்டது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்பதற்கான பதிலும் தற்போது வெளியாகியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. அனுமதியை மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்ததாக கூறப்பட்டது.