உடல் தகுதியை நிரூபிக்குமாறு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திரா ஜடேஜாவுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிய கோப்பை தொடருக்கு பின்னர், இவர் ஒரு போட்டியில் கூட இதுவரை விளையாடவில்லை. ரவிந்திர ஜடேஜாவின் பெயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ரவீந்திர ஜடேஜா எந்த போட்டியில் விளையாடாத நிலையில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் உள்ளூரில் நடைபெறும் ஏதாவது ஒரு போட்டியில் விளையாடி உடல் தகுதியை ஜடேஜா நிரூபிக்கவேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம் பெற்றுள்ளனர். ரவிந்திர ஜடேஜா உடல் தகுதியை நிரூபிக்காவிட்டால் அக்சர் படேல் ஆடும் லெவனில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. ரவிந்திரா ஜடேஜா ரவிந்திரா ஜடேஜா