முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டத்தில் விதிமுறைகள் மீறல் இருப்பதாக பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலில் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • 17

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  டி20 உலகக் கோப்பை இந்திய அணி நேற்று (செப்டம்பர் 8) அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அறிவிக்கப்பட்ட 15 வீரர்களில் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். இதேப்போன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறவித்தார். தற்போது ஆலோசகராக மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தோனியின் அனுபவம் இந்திய அணியை சாம்பியன் பட்டம் பெற உதவும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 37

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  ஆனால் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டத்தில் விதிமுறைகள் மீறல் இருப்பதாக பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலில் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 47

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, லோதா கமிட்டியின் பரிந்துரைகளின் கீழ் தோனியின் நியமனம் பிரிவு 38 (4) ஐ மீறுவதாக புகார் தெரிவித்துள்ளார். அவர் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட அபெக்ஸ் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  சஞ்சீவ் குப்தா லோதா கமிட்டியின் பரிந்துரைகளின்படி ஒரு நபர் எப்படி இரண்டு பதவிகளை கையாள முடியும் என்று விளக்கம் கேட்டு உள்ளார். எனினும், பிசிசிஐ வட்டாரங்கள் இது குறித்து அபெக்ஸ் கவுன்சில் தனது சட்டக் குழுவை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  தோனி ஏற்கனவே பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். தற்போது அவர் இந்திய அணிக்கு ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சர்ச்சை தொடங்கியது. இருப்பினும், சஞ்சீவ் குப்தா கடந்த காலங்களில் இதுபோன்ற பல புகார்களை வீரர்களுக்கு எதிராக அளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

  டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியில் ஷிகார் தவான், சஹால் இடம்பெறவில்லை. தமிழக வீரர்கள் ரவிசந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.

  MORE
  GALLERIES