ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » 8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

 • 19

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  உலக அளவில் எப்படி இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி செயல்படுகிறதோ அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பெண்கள் கிரிக்கெட்  அணியும் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 8 முறை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அனைத்து 8 முறையும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. மேலும் அதில் 2018ஆம் ஆண்டு மட்டுமே இறுதி போட்டியில் தொற்றுள்ளது, 8 முறையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை 7 முறை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டியில் எப்படி வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்போம்.

  MORE
  GALLERIES

 • 29

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா -மற்றும் இலங்கை அணிகள் மட்டுமே பங்கேற்றன. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதன் முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  MORE
  GALLERIES

 • 39

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  2வது ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடைபெற்றது.2005 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2006 ஜனவரி வரை நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 2வது முறையாக மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  MORE
  GALLERIES

 • 49

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  3வது ஆசிய கோப்பை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாகவும் இலங்கை அணியுடன் மோதியது. 50 ஓவர்கள் கொண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆசிய கோப்பை மகளிர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  MORE
  GALLERIES

 • 59

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  4வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் இலங்கை அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடருடன் மகளிர் ஆசிய கோப்பை தொடர் 20 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

  MORE
  GALLERIES

 • 69

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 5வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன் முறையாக 20 ஓவர்கள் போட்டியாக சீனாவில் நடைபெற்றது. இந்த முறை முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த பாகிஸ்தான் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது. இதில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக மகளிர் ஆசிய கோப்பையை தட்டி சென்றது

  MORE
  GALLERIES

 • 79

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  2016ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் 6வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

  MORE
  GALLERIES

 • 89

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  2018ஆம் ஆண்டு 7வது முறையாக நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை மலேசியாவில் நடைபெற்றது. இதில் 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்திய அணி முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த வங்கதேச அணியுடன் மோதியது. இதில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வைத்திருந்த இந்திய அணியை 3விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக ஆசிய கோப்பை தொடரை வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியது

  MORE
  GALLERIES

 • 99

  8 முறை இறுதிப்போட்டி... 7 முறை வெற்றி... ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி

  இந்த நிலையில் தான் வங்கதேசத்தில் நடைபெற்ற 8வது மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 7வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

  MORE
  GALLERIES