இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆசஸ் தொடருடன் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது.
2/ 10
ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது.
3/ 10
இந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.
4/ 10
வரலாறு - உலகக்கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடருக்கான யோசனை முதன் முதலில் 2010-ம் ஆண்டு தோன்றியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பதிலாக 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது அது கைவிடப்பட்டது.
5/ 10
அணிகள் - ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 9 இடங்களை பிடித்த அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
6/ 10
போட்டி முறை - தொடரில் கலந்து கொள்ளும் 9 அணிகளும் 6 அணிகளுடன் மோதும். 3 அணிகளுடன் சொந்த நாட்டிலும், 3 அணிகளுடன் வெளிநாட்டிலும் மோதும். ஒவ்வொரு அணியுடனும் மற்ற அணிகள் 2 முதல் 5 போட்டிகளில் மோத உள்ளன.
7/ 10
ஆட்டம் பகல் அல்லது பகல் -இரவு போட்டிகளாக நடத்தப்படும். முதல் பதிப்பில் மொத்தமாக 71 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோத உள்ளது.
8/ 10
ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் பதிப்பு முதல் பதிப்பு முடிந்தவுடன் தொடங்கி 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறவுள்ளது.
9/ 10
புள்ளிகள் அமைப்பு - ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொடரில் அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் மோதி ஒன்றில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 20 புள்ளிகள் வழங்கப்படும்
10/ 10
புள்ளிகள் அமைப்பு - ஒரு தொடரில் அணிகள் 3 டெஸ்ட் போட்டியில் மோதி ஒன்றில் வெற்றி பெற்றால் 40 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13.3 புள்ளிகள் வழங்கப்படும்