ஐ.பி.எல் 2021 தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதனால் போட்டிகளை குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல் 2021 தொடருக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் முடிந்த உடன் போட்டி அட்டவணை தயாரிக்ப்படும்.
கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் 2020 ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தீவர முனைப்பு காட்டி வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகளின் போது வீரர்களின் பயணத்தை குறைக்க குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டியை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
அதன்படி மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அகமாதபாத் மைதானம் மிகவும் பெரிது மற்றும் ரசிகர்கள் அதிகம் அமரும் சீட் உள்ளதால் இங்கு ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.




