இதுவரை இந்தியாவில் மூன்று முறை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளது. ஆனால் இந்த மூன்று முறையில் இந்தியா மட்டும் இதை தனித்து நடத்தியதில்லை. 1987ல் பாகிஸ்தானுடன் இணைந்தும், 1996 இல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்தும், 2011 இல் வங்காளதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளும் இந்திய மண்ணில் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விருந்து. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற இடங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளுக்கு மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றன.
ஐபிஎல் முடிந்த பிறகு உலகக் கோப்பை அட்டவணையும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. தற்போதைய தகவலின்படி இந்த பிரம்மாண்ட நிகழ்வான ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கணக்கீட்டின்படி, அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.