இன்றைய போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை படைப்பர்
News18 Tamil | March 23, 2019, 7:34 AM IST
1/ 8
12 -வது ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
2/ 8
முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது.
3/ 8
இதுவரை நடந்துள்ள 11 தொடர்களில் சென்னை, மும்பை அணிகள் 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
4/ 8
இன்று தொடங்கி மே 5-ம் தேதி வரை நடைபெறும் 56 லீக் சுற்று போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்
5/ 8
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது
6/ 8
பெங்களூரு அணியுடன் 22 முறை மோதியுள்ள சிஎஸ்கே அணி 14 வெற்றி, 7 தோல்வியை பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை
7/ 8
இன்றைய போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்
8/ 8
இதேபோல் விராட் கோலி 52 ரன்களை எடுத்தார் 5000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைப்பார்