ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » நினைவுகள் 2022 : ஊக்கமருந்து சர்ச்சையில் சிமோனா ஹாலெப்.. பிசிசிஐ தலைவரான ரோஜர் பின்னி.. அக்டோபர் மாதம் மறக்க முடியாத நினைவுகள்
நினைவுகள் 2022 : ஊக்கமருந்து சர்ச்சையில் சிமோனா ஹாலெப்.. பிசிசிஐ தலைவரான ரோஜர் பின்னி.. அக்டோபர் மாதம் மறக்க முடியாத நினைவுகள்
நினைவுகள் 2022 : அக்டோபர் மாதம் மறக்க முடியாத நினைவுகள்
அக்டோபர் 11: 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ரோஜர் பின்னி இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு பிசிசிஐ தலைவராக பொறுப்பெற்றார்.
2/ 8
அக்டோபர் 15: பெண்கள் ஆசியக் கோப்பை இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 7வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்தியா
3/ 8
அக்டோபர் 19: மான்செஸ்டர் யுனைடெட் வீரர் மேசன் கிரீன்வுட் பாலியல் வழக்கில் நான்கு நாட்களுக்கு பிறகு ஜாமீன் பெற்றார்.
4/ 8
அக்டோபர் 21: ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
5/ 8
அக்டோபர் 23: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மெல்போனில் நடைபெற்ற இந்தியா -பாகிஸ்ஹான் போட்டி த்ரிலாக அமைந்தது. இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தபோது விராட் கோலி கடைசி ஓவர் வரை அதிரடியாக விளையாடி சிறந்த டி20 போட்டி இன்னிங்சாக மாற்றி அமைத்து வரலாறு படைத்தார்
6/ 8
அக்டோபர் 30: உலக ஜூனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சங்கர் முத்துசாமி வெள்ளி வென்றார்
7/ 8
அக்டோபர் 30: பிரெஞ்ச் ஓபன் சூப்பர் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீன தைபேயின் லு சிங் யாவ் மற்றும் யாங் போ ஹான் ஜோடியை நேருக்கு நேர் செட்டில் வீழ்த்தி வென்றனர்.
8/ 8
அக்டோபர் 30: நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற யு-17 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.