நவம்பர் 6: டோக்கியோவில் நடைபெற்ற BWF பாரா-பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸ் தங்கப் பதக்கம் வென்றனர். SL3 இறுதிப் போட்டியில், பகத் சகநாட்டவரான நித்தேஷ் குமாரை தோற்கடித்தார், அதே நேரத்தில் மனிஷா SU5 இறுதிப் போட்டியில் ஜப்பானிய மாமிகோ டொயோடாவை வீழ்த்தினார்.
நவம்பர் 28: விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக போட்டியில் மகாராஷ்டிரா அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்தார். மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ருதுராஜ் பெற்றுள்ளார்.