ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » நினைவுகள் 2022 : ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு முதல் நட்சத்திர வீரர்களின் ஓய்வு வரை.. ஜூன் மாதம் நடந்த முக்கிய நிகழ்வுகள்
நினைவுகள் 2022 : ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு முதல் நட்சத்திர வீரர்களின் ஓய்வு வரை.. ஜூன் மாதம் நடந்த முக்கிய நிகழ்வுகள்
Year Ender 2022 : 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற விளையாட்டு உலகின் மிக சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு இதோ
ஜூன் 5: டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால், காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, தனது 14வது பிரெஞ்ச் ஓபன் கோப்பையை கைப்பற்றினார். இதன் மூலம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்தார்.
2/ 7
ஜூன் 8: மகளிர் கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி காட்டிய இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ், 23 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
3/ 7
ஜூன் 11: 2009 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, சர்வதேச கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கேத்ரின் மயோர்காவின் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
4/ 7
ஜூன் 17: நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியது.
5/ 7
ஜூன் 18: பின்லாந்தில் உள்ள குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் 86.69 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
6/ 7
ஜூன் 26: பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
7/ 7
ஜூன் 28: இங்கிலாந்து கேப்டனாக இருந்து முதல் உலக கோப்பையை வாங்கி கொடுத்த இயோன் மோர்கன் நெதர்லாந்துக்கு தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.