ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » நினைவுகள் 2022: சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. விம்பிள்டனில் அசத்திய நோவக் ஜோகோவிச்.. ஜூலை மாதம் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு
நினைவுகள் 2022: சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. விம்பிள்டனில் அசத்திய நோவக் ஜோகோவிச்.. ஜூலை மாதம் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு
ஜூலை 5: எட்ஜ்பாஸ்டனில் நடந்த 5-வது டெஸ்டின் கடைசி நாளில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது. ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் சதம் அடித்தனர்.
2/ 8
ஜூலை 9: விம்பிள்டன் இறுதிப் போட்டியில் எலினா ரைபாகினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஓன்ஸ் ஜபியரை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்ற கஜகஸ்தானின் முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
3/ 8
ஜூலை 10: விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (3) என்ற செட் கணக்கில் நிக் கிர்கியோஸை வீழ்த்தி தனது 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும், 7வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
4/ 8
ஜூலை 17: மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5 விக்கெட வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 113 ரன்களை எடுத்து தொடரை கைப்பற்ற உதவினார்.
5/ 8
ஜூலை 24: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா மீண்டும் படைத்தார்.
6/ 8
ஜூலை 28 : சென்னை மகாபலிபுரத்தில் இந்தியா நடத்திய 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது.இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7/ 8
ஜூலை 30: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 248 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் முதல் பதக்கத்தை சங்கேத் சர்கார் வென்றார்.
8/ 8
ஜூலை 30: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு, 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.