ஜோதிடப்படி, எல்லா ராசிக்காரர்களும் எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், சிலருக்கு முன்கூட்டியே தெரியும். அதில் மிக முக்கியமாக இந்த 3 ராசிக்காரர்கள் சில கெட்ட செய்திகளைக் கேட்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியை பெற்றவர்களாம். அவர்கள் யார் யார் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
கடகம்: இந்த ராசிக்காரர்கள் மற்றவர் துன்பப்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நுட்பமான மனநிலை கொண்டவர்கள் என்பது நாம் முன்பே அறிந்ததே. உணர்ச்சிகள் அவர்களுக்கு கட்டுப்பாடற்றவை. இது மற்றவர்களுக்கு பல சமயங்களில் எரிச்சலூட்டும்.மேலும் இந்த ராசியினர் அவர்களைச் சுற்றியுள்ள சூழலைக் கட்டுப்படுத்தும் சக்தியும் பெற்றவர்கள். யாரேனும் ஒருவர் முன்னால் கெட்ட செய்தி சொல்ல வந்தால்.. அவர் என்ன சொல்கிறார் என்று கடக ராசிக்காரர்களுக்கு முன்பே தெரியும். அவர்களுக்கு இந்த சக்தி கிடைத்தது அதிர்ஷ்டமா? துரதிஷ்டவசமா? என்று எண்ணி வருந்துபவர்களும் உண்டு.
விருச்சிகம்: கெட்ட செய்திகள் முதலில் வரும் என்பதை இந்த ராசிக்காரர்களும் அறிவார்கள். அவர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. மேலும் இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். புதிய விஷயங்கள் பற்றி கண்டறிய விரும்புவார்கள். நல்ல தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள்...அவர்களுக்கு நடக்கப்போகும் தீமை பற்றி நாம் சொல்லாவிட்டாலும்.. தாங்களே அதனை எளிதில் கண்டுபிடிக்கும் குணம் கொண்டவர்கள். இது மிகவும் அரிதான நட்சதிரகாரர்களுக்கு மட்டுமே காணப்படுகிறது.