ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

chithirai 2022 | 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்கு சூரியன் வரும்பொழுது சித்திரை மாதம் பிறக்கிறது.

 • 113

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  சுபகிருது ஆண்டு 2022 ஏப்ரல் 14 அன்று பிறந்தது. தமிழ் மாதங்களின் அடிப்படையில் கடைசி மாதமான பங்குனி மாதம் முடிந்த பிறகு சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ் வருடப்பிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களின் பிறப்பு சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்கு சூரியன் வரும்பொழுது சித்திரை மாதம் பிறக்கிறது. மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சித்திரை 2022, ஒவ்வொரு ராசியினருக்கும் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 213

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  சித்திரை 2022 பலன்கள்: மேஷ ராசிக்கு நிம்மதி பிறக்கும்:மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அமைதியான சூழலைத் தரும். பரபரப்பும் படபடப்பும் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வேளையில் உங்களுடைய திறன்களை வெளிப்படுத்தி பதவி உயர்வி, ஊதிய பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. செவ்வாய் அன்று முருகப்பெருமான் வழிபாடு செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 313

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  சித்திரை 2022 பலன்கள்: ரிஷப ராசிக்கு முயற்சிகள் வெற்றிபெறும் சுபகிருது ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும் ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. எல்லா விஷயத்திலும் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் காலம் இது. எதிர்பாராத வகையில் மாற்றம், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும். சனிக்கிழமைகளில், நவகிரக சன்னதியில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 413

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  மிதுன ராசியினருக்கு சிறப்பான தொடக்கம்: நினைத்ததெல்லாம் நிறைவேறப் போகும் ஆண்டாக சுபகிருதுவின் தொடக்கமே அசத்தலாக அமைந்துள்ளது. தோல்விகள் தான் என்ற நிலை மாறி, இனி தொட்டது எல்லாமே வெற்றி தான் என்று அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானம், தொழில் விருத்தி அடையும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 513

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  கடக ராசிக்கு சுப தடைகள் விலகும்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு நீண்ட காலமாக காத்திருந்த கடக ராசியினருக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும், ஆனால், வரவிருக்கும் மாதங்களில் உங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். உடல் நலத்தின் மீது கூடுதல் கவனம் தேவை. திங்கள் அன்று சோமவார விரதம் இருப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 613

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  சிம்ம ராசிக்கு விரயம் ஏற்படும்: அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவரும் சுபகிருது ஆண்டு, கூடவே கொஞ்சம் ஆடம்பர பொருட் சேர்க்கை மற்றும் விரயங்களைக் கொண்டு வரும். எனவே, முடிந்த வரை செலவுகளைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். சிறு சிறு சண்டையும் விவாதமும் ஏற்பட்டு மறையும். பொறுமை காப்பது நல்லது. புதன் கிழமைகளில் பச்சை பயிறு தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 713

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  கன்னி ராசியினர் தொட்டதெல்லாம் பொன்னாகும்: ஆதங்கங்கள் மறையும், வருமானம் அதிகரிக்கும், தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். வியாபாரம், கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் தீரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகும் காலம் இது. பச்சை நிற ஆடைகள் அணிவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 813

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  துலாம் ராசியினர் அனுசரிக்க வேண்டும்: எவ்வளவு தடைகள் வந்தாலும், அனுசரித்து செல்ல வேண்டிய காலம் இது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மனம் விட்டு பேசுவதும், இணக்கமாக இருப்பதும் பிரச்சனைகளைத் தவிர்க்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். வியாழன் அன்று குரு பகவான் வழிபாடு தடைகளை விளக்கும்.

  MORE
  GALLERIES

 • 913

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  விருச்சிக ராசிக்கு அமோகமான மாதம்: சிறப்பாகத் தொடங்கியுள்ள சுபகிருது ஆண்டு, இந்த மாதம் மிகவும் அமோகமாக இருக்கும். சோர்வு நீங்கு உற்சாகம் பிறக்கும். தாமதங்கள் நீங்கி, அதிரடியான வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும். ஞாயிறுக்கிழமைகளில் சூரிய வழிபாடு நன்மை தரும்.

  MORE
  GALLERIES

 • 1013

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  தனுசு ராசிக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்: உங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் இது. அதே போல, எது கிடைத்தாலும் மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்துக்கான அடித்தளமாக அமையும். தொலைதூரப் பயணங்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். உளுத்தம் பருப்பை தானம் செய்வது தடைகளை விலக்கும்.

  MORE
  GALLERIES

 • 1113

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  மகர ராசிக்கு ஆதரவு கிடைக்கும்: நீங்கள் நினைத்ததை செயல்படுத்த, உறவினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் பார்வையில் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை சிவ வழிபாடு கூடுதல் நன்மை அளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 1213

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  கும்ப ராசியினரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்: உறவுகள், கணவன் மனைவி மற்றும் குடும்பத்தில் இருந்த கசப்புகள் விலகி, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மேலோங்கும். கடன் தொகை விரைவில் வசூலாகும். பண வரவு திருப்தியாக இருக்கும். சனிக்கிழமை பைரவர் வழிபாடு சாதகமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 1313

  சித்திரை 2022: சித்திரை மாத ராசி பலன்... யாருக்கு யோகம் தர போகிறது...

  மீன ராசிக்கு தனித்திறமைகளை வெளிப்படுத்தும் காலம்: உங்கள் தனித்திறமை வெளிப்படுத்தும் மாதமாக இது அமையும். இதனால் மறைமுக எதிரிகள் மற்றும் விமர்சனங்கள் தோன்றலாம். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள், அதற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் கவனமாக இருக்கவும். தடைகள் நீங்கி, வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மலை சார்த்தி வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES