ஒருவரின் வாழ்க்கையில் நிகழ உள்ள விஷயங்களை முன்கூட்டியே கணிக்க ஜோதிடம் முக்கியமாக உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொன்றும் நவ கிரகத்துடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. பூமியில், தங்கம், வெள்ளி, காப்பர், இரும்பு என பல்வேறு வகையான உலோகங்கள் உள்ளது. இவை அனைத்தும் கிரகத்துடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண, ஜோதிடர்கள் அதிர்ஷ்ட மோதிரம் அணியச் சொல்கிறார்கள். அந்தவகையில், உங்கள் ராசிக்கான உலோகம் எது என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
ஒவ்வொரு ராசிக்கும் ஏதோ ஒரு உலோகத்துடன் தொடர்பு உண்டு. உதாரணமாக, சில ராசி தண்ணீரின் உறுப்புடன் தொடர்புடையவை, மற்றவை நெருப்பின் உறுப்புடன் தொடர்புடையவை. அதே போல, 12 ராசியும் வெவ்வேறு உலகத்துடன் தொடர்புடையது. கிரகங்களின் பெயர்ச்சி, சில ராசியினருக்கு அசுப பலன்களை வழங்கும். அதற்கு சரியான பரிகாரம் பலவீனமான கிரகத்தை நிலையாக வைப்பது. சில உலோகங்களை அணிவதன் மூலம் அல்லது வீட்டில் வைத்திருப்பதன் மூலம், உடல் மற்றும் நிதி நன்மைகளைப் பெறலாம். உங்க ராசி அடையாளத்தின்படி எந்த உலோகம் உங்களுக்கு பொருந்தும் என்பதை பார்க்கலாம்.