சனி பகவானை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், அவர் அதிக அசுப பலன்களை தரக்கூடியவர். துவக்கத்தில் அசுப பலன்களை கொடுத்தாலும், மற்ற ராசிக்கு பெயர்ச்சி செய்யும் போது நல்ல பலன்களை கொடுப்பார். அந்தவகையில், சனி பகவான் எப்போது சுப பலன் தருவார்… எப்போது அசுப பலன் தருவார் என நம்மில் பலருக்கும் குழப்பம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சனியின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கான பதிலை இங்கே காணலாம்.
சனி அசுப பலன்களை மட்டும் தான் கொடுப்பாரா? என்ற கேள்வி பலரின் சிந்தையிலும் இருக்கும். ஆனால், அதற்கான சரியான பதில் கிடைப்பது கடினம். ஏனெனில், நவகிரகங்களை சுப மற்றும் அசுப கிரகங்கள் என இரண்டாக பிரிக்கின்றனர். சுப கிரகங்களாக இருந்தாலும், அசுப கிரகமாக இருந்தாலும் அவை கலவையான பலன்களை தான் கொடுக்கும். ஆனால், பலன்களின் தன்மை, அவை அமர்ந்துள்ள இடத்தைப் பொறுத்து மாறுபடும். சரி நாம் சனி எப்போது சுப, அசுப பலனைத் தருவார் என்பதைப் பார்ப்போம்.
சனி பகவான் எப்படிப்பட்டவர்?: நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவானின் மகன் சனி பகவான். இவர் நீதி அரசனாக, கர்ம காரகன், மந்தன் என அழைக்கப்படுபவர். எனவே, உங்களின் கர்ம வினைக்கு ஏற்ப பலனை கொடுக்கக்கூடியவர். அதன் அடிப்படையில் தான் ஒருவருக்கு செழிப்போ அல்லது வறுமையோ ஏற்படலாம். சனி பகவான் ஒருவருக்கு சோம்பேறித் தனம், வலிமையற்ற, பழமையான எண்ணம், புத்தி கூர்மை, தமோகுனி, ஆண் ஆதிக்க குணத்தைத் தரக்கூடியவர்.
சனி எப்போது அசுப பலன் தருவார் : மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் தூதர், சட்டம், கைவினை, தத்துவம், வேலைக்காரன், தந்திரம், மந்திரம் மற்றும் கருவி ஆகியவற்றின் பிரதிநிதி. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நீதித்துறை மீதும் சனிக்கு அதிகாரம் உள்ளது. சனியின் நண்பர்களான ராகு மற்றும் புதன் சனியின் தோஷங்களை நீக்கும். சனியின் சஞ்சாரம் வலுவாக இருக்கும்போது, அதனுடன் தொடர்புடையவர்கள் முன்னேறுவார்கள். எனவே, சனி பகவான் கோள்சார பெயர்ச்சியின் போது அவரின் ஏழரை சனி காலத்தில் அதிக அசுப பலனைத் தரக்கூடியவராக இருப்பார்.
சனி எப்போது சுப பலன் தருவார் : சனி ஜாதகத்தில் 3, 6, 10 மற்றும் 11-வது வீட்டில் சுப பலன்களை தரக்கூடியவர். 1, 2, 5 மற்றும் 7 வது வீட்டில் இருந்தால் தீங்கான பலன் தரக்கூடியவர். 4, 8 மற்றும் 12 ஆம் வீட்டில் இருந்தால் அது மிகவும் தோஷமாக பார்க்கப்படுகிறது. சனியின் நல்லருள் கிடைக்க, இறை வழிபாடு செய்யவும். இறை வழிபாடு செய்வதைத் தாண்டி தான, தர்மங்கள் செய்யவும். உங்கள் வேலையில் நேர்மையுடன் நடந்து கொள்ளவும்.