கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான்.மஞ்சள் நனைத்த கயிற்றில் தாலி அணிவதே சிறப்பாகும். அதுவே நம் பாரம்பரியமுமாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தாலி , திருமண மோதிரம், மெட்டி, குங்குமம், மாலை போன்றவை தவறுவது போல் கனவு கண்டால் உடனே அது மனதுக்கு அபசகுனமாக தான் தோன்றும். அது இயல்பாகவே நமக்குள் வந்துவிடும் ஒரு தடுக்க முடியாத உணர்வு. பதற்றம் அந்த சமயத்தில் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு பயப்பட வேண்டிய அல்லது பதட்டப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்கிறது சாஸ்திரம்.
அப்படியெனில் தாலி கழற்றுவது போன்ற கனவு என்ன மாதிரியான பலன்களை தரும்? திருமணமான பெண்ணுக்கு இந்த கனவு வந்தால் என்ன அர்த்தம்? அதுவே திருமணமாகாத பெண்ணுக்கு இந்த மாதிரியான கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம்? இது போன்ற கனவு, நல்லது நடப்பதற்குரிய அறிகுறியா? அல்லது அபசகுணமா? என்பதை இந்தப் பதிவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.