முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

Remedies for Shani Dosh : சனி பகவானுடன் தொடர்புடைய உணவு பொருட்கள் கருப்பு எள் மற்றும் கருப்பு உளுந்து. நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோஷத்தை நீக்க உளுந்தம் பருப்பு உதவியாக இருக்கும்.

  • 16

    சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

    கடந்த வெள்ளிக்கிழமை (மே 19 அன்று) சனி ஜெயந்தி நடைபெற்றது. அசுப பலன்களை மட்டுமே வழங்கும் என கூறப்படும் சனி பகவான், சில சமயங்களில் சுப பலன்களையும் வழங்குவார். வீட்டிலேயே நாம் சில பரிகாரங்களை செய்வதன் மூலம், சனி தேவன் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பார் என ஜோதிடம் கூறுகிறது. அதை, அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து செய்யவேண்டும். அதாவது, சனி பகவான் உறைந்திருக்கும் பொருட்களான கருப்பு எள் மற்றும் கருப்பு உளுந்து உங்களின் பிரச்சினைகளை நீக்கும். உளுத்தம்பருப்பு வைத்து செய்யக்கூடிய சில எளிய பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

    உளுத்தம் பருப்பு துரதிர்ஷ்டத்தை நீக்கும் : உங்கள் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகவில்லை என்றால், சனி ஜெயந்தி அல்லது 21 சனிக்கிழமைகள் தொடர்ந்து உளுந்தம் பருப்பை வைத்து பரிகாரம் செய்து வந்தால், நீங்கள் நிச்சயமாக பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். சிறிதளவு உளுத்தம் பருப்பில், குங்குமம் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி அதை அரச மரத்தின் தூரில் தெளிக்க வேண்டும். தெளித்தா பின், திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்துடவும். இந்த பரிகாரத்தை 21 சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வாழ்க்கை மாறத் தொடங்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

    நிதி வளம் பெற : நீண்ட காலமாக அதிகரித்து வரும் செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் மற்றும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால், இந்த பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சனிக்கிழமை, ஓடும் நீரில் கருப்பு எள்ளுடன் கருப்பு உளுத்தம் பருப்பைப் விடவும். ஓடும் தண்ணீரால், உங்கள் நிதிப் பிரச்சனைகளும் நீங்கி, உங்கள் வீட்டில் நிதி வளம் பெருகும்.

    MORE
    GALLERIES

  • 46

    சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

    சனி தசையில் நிவாரணம் பெற : உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தும், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சனியின் பெயர்ச்சியால் தொந்தரவும் ஏற்பட்டிருந்தால், சனி ஜெயந்தி அல்லது சனி கிழமைகளில், உளுத்தம் பருப்பு கிச்சடி செய்து, அதை தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சனியின் தசாவில் உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது, விரைவில் உங்கள் நல்ல நாட்கள் தொடங்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

    வறுமையை நீக்கும் உளுத்தம் பருப்பு : கடினமாக உழைத்தும் வறுமை நீங்கவில்லை என்றால், சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை நிரப்பி, அதை சனிக்கிழமை இரவு படுக்கைக்கு அடியில் வைக்கவும். அடுத்த நாள், அந்த எண்ணெயில் உளுத்தம்பருப்பு உருண்டை செய்து நாய்க்கு உணவளிக்கவும். இப்படி செய்து வந்தால் உங்கள் துரதிர்ஷ்டம் மெதுவாக அதிர்ஷ்டமாக மாறத் தொடங்கும், உங்கள் வறுமை நீங்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    சனி தோஷம் பிரச்னைகள் தீரணுமா? இந்த பரிகாரங்களை செய்தாலே போதும்!

    நீதிமன்ற வழக்கிலிருந்து விடுபட : நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகளில் காரணமே இல்லாமல் சிக்கிக் கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் போனால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். சனி ஜெயந்தி அல்லது சனிக்கிழமையில், ஒரு பிடி உளுத்தம் பருப்பை எடுத்து, அரச மரத்தின் ஒரு சிறிய குழி தோண்டி அதில் புதைக்கவும். அதன் பிறகு பீப்பல் மரத்தின் முன் இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நீதிமன்றச் சிக்கலில் இருந்து விரைவில் விடுதலை பெறுவீர்கள்.

    MORE
    GALLERIES