காலசர்ப்பம்: ஜாதக சுழற்சியில் மிகவும் பயப்படக்கூடிய தோஷங்களில் காலசர்ப்ப தோஷம் ஒன்று. இது இரண்டு தீய கிரகங்களால் ஏற்படுகிறது. ராகு மற்றும் கேது. காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும். இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம். ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள். இவர்களுக்கு இடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து. ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம். இந்த அடிப்படையில் கால சர்ப்ப தோஷம் அமைகிறது. சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.
ஜாதகத்தில் எத்தனை அதிர்ஷ்ட யோகங்கள் இருந்தாலும் கால சர்ப்ப தோஷம் விழுந்தால் இந்த அதிர்ஷ்ட யோகங்கள் பலிக்காது என்கிறது ஜோதிடம். இதில் ராகு என்பது ஒரு பயங்கரமான பாம்பின் தலை... அந்த பாம்பின் வால் போன்றதுதான்கேது. காலசர்ப்ப தோஷத்தால் சிறந்த யோகங்களும் பலன்களும் கெடுகின்றன. மேலும் ஜாதகத்தில் ராகு அல்லது கேது ஆரம்பித்தால்... இந்த தோஷம் அதிகமாகப் பொருந்தத் தொடங்குகிறது. இந்த கிரகங்களின் நிலைகள் தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும், இவற்றின் தாக்கம் வாழ்க்கையில் தொடர்ந்து காணப்படும்.
ஜோதிட நூல்களின்படி, இந்த காலசர்ப்ப தோஷம் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் மற்றும் வளர்ச்சியின் போது பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக, வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்கள் திரும்பிச் செல்கின்றன. அதாவது அடிக்கடி பாம்பு கடிக்கும். அல்லது பாம்பு கனவில் வந்து படபட வைக்கும். கல்வி, வேலை, திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றில் எதிர்பாராத தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் கடினமானது போல இருக்கும். மேலும், வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல காரியமும் சரியாக செய்யப்படுத்த முடியாது. திட்டமிட்டபடி எதுவும் நடக்காது.
ராகு மற்றும் கேது இடையே சந்திரன் வராமல் இருந்தால் காலசர்ப்ப தோஷம் பலிக்காது என்றும் இந்த தோஷம் ஒன்றும்பண்ணாது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜாதக சுழற்சியில் வியாழன் ராகு அல்லது கேதுவால் பார்வை பெற்றால், இந்த காலசர்ப்ப தோஷம் வேலை செய்யாது என்று ஜோதிடம் கூறுகிறது. காலசர்ப்ப தோஷம் பிறப்பு முதல் இறப்பு வரை பொருந்தும். இருப்பினும், ராகு தசா, கேது தசா அல்லது அவற்றின் இடைப்பட்ட காலங்களில் மட்டுமே வரும் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக ராகு அல்லது கேது தசா நடக்கும் போது ஜாதகருக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதனுடன் காலசர்ப்ப தோஷமும் சேர்ந்தால் அதன் விளைவுகள் மிக அதிகமாக இருக்கும். உண்மையில் ராகுவும் கேதுவும் வக்கிர கிரகங்கள். மற்ற அனைத்து கிரகங்களும் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது, இந்த இரண்டு கிரகங்களும் பின்னோக்கி செல்கிறது. அதாவது இந்த தீய கிரகங்களின் தாக்கம் மற்ற கிரகங்களையும் பாதிக்கிறது. எனவே வாழ்க்கை முன்னோக்கிச் செல்வதில்... அதாவது முன்னேறுவதில் ஒரு பிரச்சனையை உண்டாக்கும்.
பரிகாரங்கள் : ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எலுமிச்சையில் தாமரை நுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும். கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.
திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும். எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.