நாம் தூங்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு கனவு வரும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். அப்படி வரும் கனவுகளில் சில நமது நியாபகத்தில் இருக்கும், சிலவை நினைவில் இருக்காது, சில கனவுகள் நம்மை சிந்திக்க வைக்கும், இன்னும் சில கனவுகள் நமது தூக்கத்தை கெடுக்கும். இந்த கனவு எனக்கு ஏன் வந்தது?... இதன் அர்த்தம் என்ன? என பலமுறை யோசித்திருப்போம்.
இரண்டு வகையான கனவுகள் இருப்பதாக தூக்க நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒன்று கடந்த கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது, மற்றொன்று எதிர்கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவை. அந்தவகையில், உங்கள் கனவில் எப்போதாவது சிவபெருமானை பார்த்திருந்தால் அதற்கு அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?. இது ஜோதிடம் கூறும் அர்த்தத்தை இங்கே பார்க்கலாம்.
கனவில் பார்வதி பரமேஸ்வரரைக் கண்டால் அர்த்தநாதீஸ்வரரின் பாக்கியம் கிடைக்கும் என்று அர்த்தம். உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் பதற்றம் முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தம். இருப்பினும், பார்வதி தேவிக்கு நீர் அபிஷேகம் செய்தால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதன் பிறகு சிவன் கோவிலில் தேன் சமர்ப்பித்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஸ்வப்ன சாஷ்திரத்தின்படி, உங்கள் கனவில் ஈஸ்வர் தாண்டவம் செய்வதைக் கண்டால், கடவுள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்றோ அல்லது எதிர்காலத்தில் நீங்கள் வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என பயப்படத் தேவையில்லை. நிஜ வாழ்க்கையில் நீங்கள் எதிரிகளால் துன்பப்படும் போது சிவபெருமானின் இந்த வடிவத்தைக் காண்பீர்கள். சிவபெருமான் தனது பக்தர்களுக்கு எதிரிகளிடமிருந்து விரைவில் விடுதலை அளிப்பார் என்பது தான் இதன் பொருள்.