பெரும்பாலும் தூக்கத்தின் போது நாம் காணும் கனவுகள் நம் நினைவில் இருப்பதில்லை. சில கனவுகள் மட்டுமே நமது நியாபகத்தில் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தம் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை நமது நிஜ வாழ்க்கையில் நடக்க இருக்கும் நல்ல அல்லது கெட்ட விஷயங்களின் அறிகுறியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நம்மில் பலருக்கு, நாம் காணும் கனவுக்கான அர்த்தங்கள் தெரியாது. ஒருவேளை, உங்கள் கனவில் கோயில் தெய்வங்கள் வந்தால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் உதவுகிறோம்.
பெரும்பாலானோருக்கு இறைவன் குறித்த கனவு வருவதில்லை. இவை பெரும்பாலும், ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு மட்டும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், அவர்கள் எப்போதும் கடவுள் குறித்து அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். அடிக்கடி வேண்டுதல்களை வைப்பவர்கள். சுருங்கச் சொன்னால், பிரபஞ்சத்தையே ஆளும் சக்தியாக அவரை வழிபடுபவர்கள். ஸ்வப்னா சாஸ்திரத்தின்படி, கடவுளைப் பற்றி அடிக்கடி கனவு காண்பது என்பது நீங்கள் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் திருப்தியாகவும் இருப்பதைக் குறிக்கிறது. எனவே, கடவு குறித்த கனவுகள் வந்தால் நீங்கள் பதட்டப்பட அவசியம் இல்லை.
விநாயகப் பெருமான் உங்கள் கனவில் வந்தால் உங்களைச் சுற்றியுள்ள பிரச்னைகள் யாவும் முடிவுக்கு வரும் என்பதை குறிக்கிறது. ஒருவேளை, உங்கள் கனவில் முருகப் பெருமான் வந்தால் நடப்பவை அனைத்தும் நன்மையில் முடியும். உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கும். பெண் தெய்வங்கள் கனவில் வந்தால் உங்கள் எதிரிகள் பலமிழந்து போவார்கள். வெற்றி உங்களுக்கே என்பதை குறிக்கும்.
காவல் தெய்வங்களை கனவில் கண்டால், சகல ஐஸ்வர்யங்களும் உங்களுக்குக் கிடைக்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும் என்று பொருள். காவல் தெய்வங்கள் என கூறினால், மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, பிலாவடி, மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு.
உங்கள் கனவில் சிவலிங்கத்தின் தோற்றத்தை கண்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இத்துடன் பணமும், உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்க போகிறது. மறுபுறம், நீங்கள் உங்கள் கனவில் சிவனைக் கண்டால், உங்கள் நல்ல காலம் வரப்போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
லட்சுமி தேவி உங்கள் கனவில் வந்தால், அது செல்வ செழிப்பு குறித்த நல்ல சகுனம். அன்னை லட்சுமி தாமரை இருக்கையில் இருப்பதை கண்டால், அமர்ந்திருக்கும் லக்ஷ்மி அன்னையை கனவில் கண்டால், அபரிமிதமான செல்வத்தை நீங்கள் அடையப்போகிறீர்கள் என அர்த்தம். ஒரு தொழிலதிபர் அத்தகைய கனவைக் கண்டால், அவர் பெரும் பணப் பலன்களைப் பெறப் போகிறார்.
கனவில் துர்கா தேவி சிவப்பு நிற உடையில் காணப்பட்டால், உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மங்களகரமான நிகழ்வு நடக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் இருக்கும் துறையில் உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கப்போகிறது என்பதை குறிக்கிறது. அது குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி. ஆனால் துர்கா தேவியோடு கர்ஜனை செய்யும் சிங்கத்தைக் கண்டால், அது ஏதோ பிரச்னை வருவதைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கனவில், நீங்கள் அழுவது அல்லது கடவுளிடம் மன்றாடுவதை நீங்கள் கண்டால், உங்களுக்கு சில இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம். அதுமட்டும் அல்ல, நீங்கள் கஷ்டப்படும் போது கடவுளை நம்பியதாகவும், எல்லாம் கிடைத்த பிறகு அவரை மறந்து விட்டதையும் குறிக்கும். மேலும், நீங்கள் ஒரு இரக்கமுள்ள நபர், தேவையில்லாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறீர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டு செய்வீர்கள் என்பதையும் குறிக்கும்.