கனவு அனைவருக்கும் வரும் இயல்பான விஷயங்களில் ஒன்று. அவை நல்லவையாகவும் இருக்கலாம், கெட்டவையாகவும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக ஸ்வப்ன சாஸ்திரத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சில சமயத்தில் உங்கள் கனவில் நீங்கள் பூனையை பார்த்திருப்பீர்கள். ஆனால், அதற்கு என்ன அர்த்தம் என்று நமக்கு தெரியாது. நாங்கள் உங்களுக்கு அதற்கான அர்தத்தை கூறுகிறோம்.
பூனை எதை குறிக்கிறது? ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூனைகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் இடம்பெற்றுள்ளது. எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்தையும் தரும் தெய்வமாக பார்க்கப்படுகிறது. ஜப்பானில் பூனைகள் புனிதமானவர்களாகவும், ஆன்மாக்களின் பாதுகாவலராகவும் கருதப்படுகின்றனர். தற்போது, நம்மில் பலர் பூனையை ஒரு அபாயமான மற்றும் அசுபமான பிராணியாக கருதுகிறோம். பூனை கனவில் வந்தால் அவை நல்ல பலன்களை தருவதாக கூறப்படுகிறது.
கருப்பு பூனை கனவில் வந்தால் (Black Cats in Dream) : கருப்பு பூனைகளை நாம் பெரும்பாலும் பேய் அல்லது மாந்திரீக திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஒருவேளை, உங்கள் கனவில் கருப்பு பூனை கனவில் வந்தால், நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்பதற்கான குறிப்பதாக கூறப்படுகிறது. உங்களுக்கு நெருக்கமான ஒரு நபர் மூலம் உங்களுக்கு ஏதோ சிக்கல் ஏற்படப்போகிறது என கூறப்படுகிறது. அதே சமயம், சில சமயங்களில் கருப்பு பூனை கனவில் வந்தால் உங்களுக்கு பணவரவு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
பூனைக்குட்டிகள் கனவில் வந்தால் (Kittens or Small Cats) : உலகில் உள்ள அழகான உயிரினங்களில் பூனைக்குட்டிகளும் அடங்கும்!. அப்படி, உங்கள் கனவில் அழகான பூனைக் குட்டிகள் வந்தால், நீங்கள் பாதுகாப்பாக இல்லை என அர்த்தம். இல்லையெனில், உங்கள் குழந்தையின் அடையாளமாகவும் இருக்கலாம். அதுமட்டும் அல்ல, மற்றவர்களுடனான உங்கள் உறவு மிகவும் நன்றாக இருக்கும் என்பதையும் குறிக்கிறது.
பூனை விளையாடுவதை போல உங்களுக்கு கனவு வந்தால் (Cats Playing) : பூனைகள் இயல்பாகவே குறும்புத்தனமான மற்றும் விளையாட்டுத்தனமான உயிரினம். உங்கள் கனவில் பூனை விளையாடுவதை பார்த்தால், அது உங்களை சற்று ஓய்வெடுக்க கூறுகிறது. இரையுடன் விளையாடும் பூனைகள் அதிர்ஷ்டத்தின் சகுனமாக பார்க்கப்படுகின்றன. நீங்கள் எதிர்பார்க்காத மூலத்திலிருந்து நிதி ஆதாயங்களைப் பெறலாம். அதே சமயம், நீங்கள் அந்த பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தால், சகுனம் குறைவாக சாதகமாக இருக்கலாம்.