ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெயில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அந்தவகையில், மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் நவகிரகங்களின் கர்ம காரகன், ஆயுள் காரகன் என அழைக்கப்படும் சனி பகவான். அதாவது, இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்வார். இவர் ஒரு ராசிக்கு பெயர்ச்சி ஆனதும், அவர் பெயர்ச்சி செய்துள்ள ராசிக்கு முன் மற்றும் பின் ராசிகளுக்கு ஏழரை சனி காலம் ஆரம்பித்து விடும். அந்தவகையில், ஒரு ராசிக்கு எப்போது ஏழரை சனி முடிவடையும், அதை எப்படி கணக்கிடுவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ந்தார். இந்நிலையில், மகரம், கும்ப ராசி, மீன ராசியினர் எப்போது ஏழரை சனியிலிருந்து விடுபடுவோம் என எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏழரை சனி முடிய எத்தனை ஆண்டுகள் உள்ளது? : கும்ப ராசிக்கு ஏழரை சனி முடிய இன்னும் 5 ஆண்டு உள்ளது. மகர ராசிக்கு ஏழரை சனி முடிய இன்னும் 2 1/2 ஆண்டு உள்ளது. மீன ராசிக்கு ஏழரை சனி முடிய இன்னும் 7 1/2 ஆண்டு உள்ளது. அடுத்து வரும் சனிப் பெயர்ச்சியின் (29.03.2025) போது மகர ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடும்.
உங்கள் ராசிக்கு என்ன சனி நடக்கிறது? : மேஷ ராசிக்கு 11 ஆம் ஸ்தானத்தில் லாப சனியாக உள்ளார். இது மிகவும் நன்மை தரும். ரிஷப ராசிக்கு 10 ஆம் ஸ்தானத்தில் கர்ம சனி உள்ளதால் பாதிப்பு குறைவு. மிதுன ராசிக்கு 9 ஆம் ஸ்தானத்தில் பாக்கிய சனி உள்ளதால் அஷ்டம சனி முடிவடைந்தது. கடக ராசிக்கு 8 ஆம் ஸ்தானத்தில் அஷ்டம சனி இருப்பதால் பாதிப்பு அதிகம் இருக்கலாம். சிம்ம ராசிக்கு 7 ஆம் ஸ்தானத்தில் கண்டக சனி ஆரம்பம் ஆவதால் சற்று கவனம் தேவை. கன்னி ராசிக்கு 6 ஆம் ஸ்தானத்தில் ரோக சனி இருப்பதால் உங்களுக்கு பாதிப்பு குறைவு.
துலாம் ராசிக்கு 5 ஆம் ஸ்தானத்தில் பஞ்சம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி ஆரம்பம். விருச்சிக ராசிக்கு 4 ஆம் ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ஆவதால் பாதிப்பு அதிகம் இருக்கலாம். தனுசு ராசிக்கு 3 ஆம் ஸ்தானத்தில் சகாய சனி மற்றும் ஏழரை சனி முடிவடைவதால் பாதிக்கு இல்லை. மகர ராசிக்கு 2 ஆம் ஸ்தானத்தில் பாத சனி மற்றும் ஏழரை சனியின் கடைசி காலம் என்பதால் சற்று கவனம் தேவை. கும்ப ராசிக்கு 1 ஆம் ஸ்தானத்தில் ஜென்ம சனி மாற்றும் ஏழரை சனியின் உச்சம் இருப்பதால் சற்று கவனம் தேவை. மீன ராசிக்கு 12 ஆம் ஸ்தானத்தில் விரய சனி மற்றும் ஏழரை சனி ஆரம்பமாவதால் பாதிப்பு அதிகம்இருக்கலாம்.