முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

தீபம் ஏற்றுவதினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும். என்ன எண்ணெயில் தீபம் ஏற்றலாம், என்ன திரியால் தீபம் ஏற்ற வேண்டும், என்ன விளக்கில் தீபம் ஏற்றலாம், எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

 • 18

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது.

  MORE
  GALLERIES

 • 28

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  காலையில் 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன் நம் வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 38

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு விளக்கேற்ற வேண்டும். அதாவது 06.00 மணிக்கு விளக்கேற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி இருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 48

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  இறந்தவர்களின் படத்திற்கு விளக்கினை ஏற்றும் போது மட்டும் தான் வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் விளக்கின் திசையை மாற்றக் கூடாது. நாம் கோவில்களில் விளக்கினை ஏற்றினாலும், நம் வீட்டில் விளக்கினை ஏற்றினாலும், இரண்டு கால்களையும் மடக்கி சம்மணம் இட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். சில விசேஷ நாட்களில் நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றும்போது தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 58

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  விளக்கு ஏற்றும் திசை பலன்கள்: கிழக்கு திசை நோக்கு விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும். மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும். வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.

  MORE
  GALLERIES

 • 68

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  விளக்கு ஏற்றும் எண்ணெய்: முதலில் விளக்கு ஏற்ற பயன்படுத்த கூடாத எண்ணெய்களை பற்றி தெரிந்து கொள்வோம். சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், சுட்ட எண்ணெயினாலும் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது. இவையெல்லாம் நம் வீட்டில் தற்திரியத்தை கொண்டு வைந்து சேர்க்கும்.

  MORE
  GALLERIES

 • 78

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  நெய்யில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும், எதை நினைத்து அந்த தீபம் ஏற்றுகிறோமோ அந்த காரியம் நிறைவேறும். நல்லெண்ணையில் விளக்கு ஏற்றினால் ஆரோக்கியத்தை பெற்றுத்தரும். தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றினால் வசீகரத்தை உண்டு செய்யும். வீட்டில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றினால் சகலகாரியத்திலும் வெற்றியை பெற்று தரும். விளக்கெண்ணெய்யில் தீபம் ஏற்றுவதால் புகழ் உண்டாக்கும். வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 88

  விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

  இந்த ஐந்து எண்ணெய்யும் சேர்த்து ஏற்ற கூடிய பஞ்சக்கூட்டு எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் தெய்வத்தின் அருளையும், குலதெய்வத்துடைய அருளையும் பெற்று தரும்.

  MORE
  GALLERIES