சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என அழைக்கப்படுபவை ராகு மற்றும் கேது. அது மட்டும் அல்ல, ராகு மற்றும் கேதுவின் பெயரை கேட்டாலே நம்மில் பலருக்கு மனது பக்கு பக்கு என அடிக்கும். ஏனென்றால், இவை சுப பலன்களை மட்டுமே தரக்கூடியவை என அனைவரும் நம்புகின்றனர். ஒரு கிரகணம் அசுப அல்லது சுப பலன்களை தருவது அதன் கிரகண சேர்க்கையை பொறுத்தது. அந்த வகையில் ஜாதகத்தில் ராகு எந்த கிரகங்களுடன் எல்லாம் சேர்ந்திருந்தால் ஒருவருக்கு நன்மை கிடைக்கும், விரைவில் பணக்காரர் ஆக முடியும் என்று பார்ப்போம்.
புதன் உடன் ராகு சேர்ந்தால் : புதன் பகுத்தறிவு திறன், பேச்சாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக இருப்பவர். புதனின் பகுத்தறியும் திறன் ராகுவின் மர்மமான தன்மையை சந்திக்கும் போது, ஒரு கற்றறிந்த ஆளுமை வெளிப்படுகிறது. இத்துடன் புதன் ராசியில் ராகு இருந்தாலும் புத்திசாலித்தனம் நிறைந்தவராக இருப்பார். தொழில்நுட்பத் துறையில் நிறைய வெற்றிகளைப் பெறுகிறார்கள். தங்கள் பேச்சினால் சமூகத்தில் செல்வாக்கைப் பெற்று விடுகின்றனர்.
குருவுடன் ராகுவின் சேர்ந்தால் : ஜாதகத்தில் குருவின் நிலை நன்றாக இருந்தாலோ, ராகு - குரு இணைவதாலோ அல்லது ராகு குருவின் ராசியில் அமைந்திருந்தாலோ, அது நல்ல சேர்க்கையாகக் கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அமைப்பு பெற்ற ஜாதகர் ஆன்மீக பாதையில் வெற்றி பெறுவார்கள். அரசியல் துறையிலும் இதேபோன்றவர்கள் மற்றவர்களை விட சிறப்பாக பணியாற்றுகிறார்கள். சில நேரங்களில் ராகு - குரு இணைவதால் மனச்சோர்வை நோக்கி அழைத்துச் செல்கிறது.
ராகுவுடன் சுக்கிரன் இணைந்தால் : ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்து, ராகுவுடன் இணைந்து இருந்தால், அத்தகயவர்கள் கலைத் துறையில் அற்புதங்களைச் செய்கிறார்கள். எந்த கலைத் துறையில் இருந்தாலும், அவர்கள் வெவ்வேறு கலைத் திறன்களுக்காக அறியப்படுவார்கள். அத்தகயவர்களின் அந்தஸ்து, தோற்றம் எதுவாக இருந்தாலும், அவர்கள் மக்களை கவர்ந்து இழுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு சேர்ந்தால் : ராகு சூரியன் அல்லது சந்திரனுடன் அமர்ந்தால், அது கிரகண தோஷத்தை உருவாக்குகிறது. சூரியன் அல்லது சந்திரன் பலன் அடைந்து, ராகு அவர்களுடன் இணைந்தால் அல்லது இந்த இரண்டு கிரகங்களின் ராசியில் அமர்ந்தால், அந்த நபர் சுப பலன்களைப் பெறுகிறார். சந்திரனுடன் ராகு இணைவது ஒரு நபரை ஒரு நல்ல தொழிலதிபராகவும், சர்வதேச வணிகம் செய்பவராகவும் ஆக்குகிறது.