திங்கட்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய தொடங்க வேண்டும். திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இது. திங்கட்கிழமை முதல் நாள் ஒரு தேங்காய். செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாள் இரண்டு தேங்காய். இப்படியாக வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாள் ஐந்து தேங்காய் வரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக 15 தேங்காய்கள் நமக்கு தேவைப்படும்.
இந்த 15 தேங்காய்களை வாங்கி உங்கள் வீடு பூஜை அறையில் வைத்து விடுங்கள். கட்டாயமாக திங்கட்கிழமையில் தான் இதை நீங்கள் தொடங்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை காலை எழுந்து குளிக்க வேண்டும். பூஜை அறையில் வாங்கி வைத்திருக்கும் ஒரு தேங்காயை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி இதை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்துவிட்டு சிதறு தேங்காய் உடைத்து விட்டு விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும்.