முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

மே மாதம் 30 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்நிலையில், சுக்கிர சஞ்சாரத்தால் 4 ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும்.

 • 15

  கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்களின் ராசியை மாறிக்கொண்டே இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது, சில ராசியினருக்கு சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படும். அந்தவகையில், காதல் கிரகமான சுக்கிரன் வரும் மே 30 ஆம் தேதி 7:39 மணிக்கு சந்திரனின் ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். மேலும், இவர் ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை 3:59 வரை கடகத்திலேயே இருப்பார். இதையடுத்து, இவர் கடக்க ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இவரின் பெயர்ச்சி சில ராசியினருக்கு சுப அல்லது அசுப பலன்களை ஏற்படுத்தும். சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சி செய்வதால், சில ராசிக்காரர்களுக்கு செலவு அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

  MORE
  GALLERIES

 • 25

  கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

  ரிஷபம் : சுக்கிரன் உங்கள் ராசியின் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிப்பதால் ரிஷபம் ராசிக்காரர்கள் நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் நண்பர்களால் உங்களுக்கு பிரச்சனை வரலாம். காதல் வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. ஏனென்றால், உங்கள் காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதற்கும் அதிகமாக உற்சாகமடைய வேண்டாம். இல்லையெனில், நீங்கள் நஷ்டத்தாய் சந்திக்க நேரிடும்.

  MORE
  GALLERIES

 • 35

  கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

  சிம்மம் : சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இந்த நேரத்தில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சோம்பல் அதிகரிக்கும். பணியிடத்தில் எதிர் பாலினத்தவர்களிடம் கவனமாக இருக்கவும். தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க இது உதவும். ஆரோக்கியம் உங்களுக்கு நல்லபடியாக இருக்கும். சளி மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 45

  கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

  தனுசு : சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து எட்டாம் வீட்டில் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட நேரிடலாம். பணியிடத்தில் பணிபுரியும் பெண்களிடம் நல்ல நடத்தையை கடைபிடிக்கவும், இல்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப வாழ்க்கையும் சற்று அழுத்தமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 55

  கடகத்தில் சுக்கிரன் சஞ்சாரம்… இந்த 4 ராசிக்கு அதிக செலவுகள் ஏற்படும்!

  கும்பம் : சுக்கிரனின் சஞ்சாரம் உங்கள் ராசியின் ஆறாம் வீட்டில் நிகழும். நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். உண்மையில், இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். உங்கள் எதிரிகள் உங்களை மிகவும் தொந்தரவு செய்யலாம். மேலும், ஆரோக்கியத்தின் பார்வையில், இந்த சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

  MORE
  GALLERIES