ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், பணம் மற்றும் அழகு ஆகியவற்றின் அங்கமாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருந்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியம், பொருளாதார வசதிகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, ஜோதிட ரீதியில் சுக்கிரன் பெயர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால், சில ராசிக்காரர்கள் நல்ல பலனையும், சில ராசிக்காரர்கள் அசுப பலனையும் பெறுவார்ககள். சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு ஏப்ரல் 6, 2023 அன்று மாறுகிறார். மே 2 ஆம் தேதி வரை அவர் ரிஷபத்தில் இருப்பார். சுக்கிரனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தருகிறது என்பதைக் கண்டறியவும்.
மேஷ ராசியினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இது உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும். நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் நல்ல பலனை கொடுக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்வீர்கள். உங்களின் நிதி நிலைமை மேம்படும். கடன் தொல்லைகள் நீங்கும். காதல் வாழ்க்கையில் சுக்கிரன் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவார்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் சஞ்சாரம் சுப பலன்களை வழங்கும். இதனால், நீங்கள் புகழின் உச்சிக்கு செல்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் இதுவரை சந்தித்த பிரச்னைகள் நீங்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். உங்களின் காதல் வாழ்க்கையும் சிறப்பாகும்.