வானில் வெள்ளி, வியாழன் மற்றும் துணை கோளான நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு கடந்த 10 நாட்களாக நிகழ்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அவ்வப்போது, சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வும் நடக்கிறது.
ஸ்பேஸ் டாட் காம் (Space.com) கருத்துப்படி, இந்த மாத தொடக்கத்தில், இந்த இரண்டு கிரகங்களும் 29 டிகிரி என்ற தூரத்தில் பிரிந்து சென்றன. இப்போது அவை மெதுவாக ஒருவருக்கொருவர் நெருங்கி வருகின்றன. பிப்ரவரி 20 ஆம் தேதி இரண்டு கோள்களுக்கும் இடையிலான தூரம் ஒன்பது டிகிரிக்கு சற்று அதிகமாக இருந்தது. பிப்ரவரி 27 அன்று, இடைவெளி வெறும் 2.3 டிகிரியாகக் குறைந்திருந்தது.