நமது விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை அலங்கரிப்பது நல்லது, ஆனால் அதே நேரத்தில் இந்த அலங்கார பொருட்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். ஏனென்றால், நாம் வீட்டை அலங்கரிக்க வைக்கும் சில ஓவியங்கள், புகைப்படங்கள், சிலைகள் அல்லது காட்சிப் பொருட்கள் வீட்டில் உள்ள மகிழ்ச்சியையும் நேர்மறையான எண்ணங்களையும் சீர்குலைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்தவகையில், வீட்டில் மறந்தும் வைக்க கூடாத சில பொருட்களை பற்றி நாம் காணலாம்.
போன்சாய் செடிகள் : ரோஜா மற்றும் மருத்துவ தாவரங்கள் தவிர, கற்றாழை மற்றும் முள் செடிகளை வீட்டில் வைத்திருப்பதை தவிர்க்கவும். எந்த வகையான போன்சாய் (Bonsai Tree) செடியையும் வைக்க வேண்டாம். ஏனெனில், அவை குறுகிய / சிறிய வளர்ச்சியைக் குறிக்கின்றன. இவற்றை போலவே நமது வாழ்க்கையும், நிதி நிலைமையும் குறுக்கும் என கூறப்படுகிறது.
எதிர்மறையான புகைப்படங்கள் (Negative Images) : வீட்டில எந்தவிதமான எதிர்மறையான எண்ணங்களை குறிக்கும் புகைப்படங்களையும் வைக்க வேண்டாம். அதாவது சோகம், தனிமை, போர்க் காட்சி, பழங்கள் அல்லது பூக்கள் இல்லாத மரங்கள், நிர்வாணமாக இருக்கும் மனிதர்கள், வேட்டையாடும் காட்சிகள், வாள்களைப் பயன்படுத்தி சண்டையிடும் காட்சிகள், கைப்பற்றப்பட்ட யானை, ஒருவர் அழுவது போன்ற புகைப்படம் ஆகிய எதிர்மறையான படங்களை ஒருபோதும் வைத்திருக்க வீட்டில் வேண்டாம். இதுபோன்ற படங்கள் இருந்தால் உடனடியாக நீக்கவும்.
தாஜ்மஹால் (Taj Mahal Picture or idol) : தாஜ்மஹால் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் அது மரணம் மற்றும் செயலற்ற தன்மையைக் குறிக்கும் கல்லறை. எனவே, தாஜ்மஹாலின் படம் அல்லது தாஜ்மஹால் சிலையை வீட்டில் வைப்பதை தவிர்க்கவும். அதுமட்டும் அல்ல பாழடைந்த கட்டிடங்களின் புகைப்படத்தை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
விலங்குகளின் சிலை அல்லது ஓவியங்கள் : பாம்பு, ஆந்தை, கழுகு, வௌவால், பன்றிகள், புறாக்கள், காகம், புலி போன்ற காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களையோ அல்லது சிலையாக உள்ள பொருட்களையோ வீட்டில் வைக்க வேண்டாம். வாஸ்து சாஸ்த்திரம் எந்த ஒரு படத்தையும் சிலையையும் வீட்டில் வைக்க வேண்டாம் என பரிந்துரைக்கிறது. தம்பதியினரின் அறையில் ஒற்றை பறவை அல்லது விலங்கு ஆகிய படங்களை வைக்க வேண்டாம். காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவம் போட்ட புகைப்படம் அல்லது சிலை உங்கள் வாழ்க்கையில் வன்முறை மனப்பான்மையை கொண்டுவரும் என கூறப்படுகிறது.
நடராஜர் சிலை : நடராஜர் என்பது பிரபஞ்ச நடனக் கலைஞரான சிவனின் உருவம். இது பெரும்பாலும் ஒவ்வொரு நடனக் கலைஞரின் வீட்டிலும் காணப்படுகிறது. ஆனால், இது உண்மையில் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. ஒன்று பிரமாண்டமான கலை வடிவத்தைக் குறிக்கிறது, மற்றொன்று அழிவைக் குறிக்கிறது. எனவே, வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அதில் நடராஜர் சிலையை வைத்து பராமரிக்கலாம்.
ப்ரோக்கன் க்ரோக்கரி (Brocken Crockery) : உடைந்த தட்டுகள், கோப்பைகள் அல்லது ஏதேனும் பாத்திரங்கள் இருந்தால், உடனடியாக அவற்றை உங்கள் வீட்டில் இருந்து அகற்றவும். பாத்திரங்கள் செல்வத்தையும் குடும்பத்தையும் குறிக்கிறது. எனவே, நீங்கள் உடைந்த அல்லது துண்டாக்கப்பட்ட தட்டுகளில் சாப்பிடும்போது, உங்கள் வாழ்க்கையில் தோல்விகளையும் பிரச்சனைகளையும் ஆழ்மனதில் இருந்து அழைக்கிறீர்கள் என்பது வழக்கம்.