புளிய மரம்: புளியமரம் புளிப்பு என்பதால் இந்த மரத்தை நட்டால், வீட்டிலுள்ள மகிழ்ச்சியும் புளிப்பாக மாறும் என்றும் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நடப்படும் புளியமரத்தால் வீட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. மேலும் அது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் தான் வீட்டின் முன்பு புளியமரத்தை யாரும் நடுவதில்லை.
கள்ளிச் செடி: முள் இருக்கக்கூடிய கள்ளிச் செடி போன்ற செடிகளை வீட்டில் எப்போதும் வளர்க்கக்கூடாது. சிலர் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் என கருதியும் இதுபோன்ற செடிகளை வளர்ப்பதுண்டு. ஆனால் வீட்டில் கள்ளி செடி போன்றவற்றை எப்போதும் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை நம் மனதிற்குச் சஞ்சலம், மன அழுத்தம் ஏற்படுத்தும். அதோடு வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தரக்கூடியது. முள் இருக்கும் செடியை வளர்ப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டை, சச்சரவுகளை உண்டாக்கும். ரோஜாவைத் தவிர மற்ற முட்செடிகள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டவை.
போன்சாய் மரம்: இதனை வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் நல்ல சக்திகளை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவை நல்ல சக்திகளை பிரதிபலிக்காது. அவை மெதுவான வளர்ச்சியை பிரதிபலிப்பதாகும். இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல. அதிர்ஷ்டமாக கருதப்படும் போன்சாய் மரம் வீட்டிற்கு வெளியே வளர்க்கலாம். ஆனால் வீட்டினுள் வளர்க்கக்கூடாது.