மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவர்கள் தங்கள் காதலையும் அன்பையும் அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல் துணையிடமிருந்து சிறந்த பதிலையும் அன்பையும் பெற்று மகிழ்வார்கள். திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள் தங்கள் துணையை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தலாம். விரிசல் ஏற்பட்ட ஜோடிகள் சேருவார்கள். அதே நேரத்தில், இந்த காதலர் வாரம் திருமணமான ஜோடிகளுக்கும் நல்லதையே தரும்.
கடகம்: இந்த ராசி காதல் ஜோடிகள் உறவில் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நிச்சயதார்த்தம் அல்லது உறவு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். மேலும் இந்த காதல் வாரம் தம்பதிகளின் பிணைப்பை பலப்படுத்தி காதலை நன்றாக வளர்க்கும்.
சிம்மம்: இந்த ராசியினர் அவர்களின் துணையிடம் அன்பைப் பொழிவார்கள். காதல் மற்றும் திருமணமான தம்பதிகளின் பிணைப்பு வலுவடையும் என்று ஜோதிடம் கூறுகிறது. திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிக்காத தம்பதிகள் இப்போது ஒப்புக்கொள்ளலாம். தனிமையில் இருக்கும் ஒருவரின் முன் சென்று அன்பையும் காதலையும் வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரம்.