வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பகல்பத்து உற்சவத்தின் 4 ஆம் தாளான இன்று காலை நம்பெருமாள், ஆண்டாள் சாய் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், மகரி, சந்திர ஹாரம், வைர மூன்றடுக்கு மகர கண்டிகை, அடுக்குப் பதக்கங்கள், வைர அபயஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, இரண்டு வடம் பெரிய முத்துச்சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை முன் மார்பில் சாற்றிக் கொண்டு இருந்தார்.