இந்நிலையில் அர்ஜுன மண்டபத்தில் இன்று நம்பெருமாள், அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்ப, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, ஸ்ரீரங்க விமான பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபயநாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவாரபாலகர்கள் என, 8 திருமேனிகள் பதிக்கப் பெற்றது) அணிந்து எழுந்தருளினார்.