திருப்பதி மலையில் மட்டும் 360 புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாகவும் அவற்றில் 108 புண்ணிய தீர்த்தங்கள் திருப்பதி மலையில் இருப்பதாகவும் அவற்றில் ஏழு புண்ணிய திருத்தங்கள் முக்தியை அளிக்க கூடியது என்றும் புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய முக்தியை அளிக்க கூடிய புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ராமகிருஷ்ண தீர்த்தம்.
திருப்பதி மலையில் பாபநாசம் அணையில் இருந்து சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் ராமகிருஷ்ணன் தீர்த்தம் உள்ளது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த ராமகிருஷ்ண மகரிஷி என்பவர் அங்கு ராமர், கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களின் திருவுருவ சிலைகளை நிறுவியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தை மாத பௌர்ணமி அன்று, அங்கு சென்று ராமகிருஷ்ண தீர்த்தத்தில் புனித நீராடி ராமர், கிருஷ்ணர் ஆகியோரை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
தீர்த்த யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பு ஆகிய ஏற்பாடுகள் அனைத்தையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்திருந்தது. ராமகிருஷ்ண தீர்த்த யாத்திரியை முன்னிட்டு திருப்பதி மலையில் இருந்து பாபநாசம் வரை செல்ல நேற்று தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் பேருந்துகளில் பாபநாசம் சென்று அங்கிருந்து ஒன்பது கிலோமீட்டர் நடந்து ராமகிருஷ்ண தீர்த்த யாத்திரை மேற்கொண்டனர்.