ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் சடங்குகளின்படி விரதம் மேற்கொள்கின்ரனர். நாட்கள், சிறப்பு நாள் விருந்துகள் உட்பட மற்ற நேரங்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் பல விதிகள் உள்ளன. இந்த விரதம் இருப்பது அறிவியல் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்க்கப்படுகிறது. உண்ணாவிரதத்தின் போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளாவிட்டால், விரதம் தோல்வியடையும். எனவே நோன்பு நோற்கும்போது மனதில் கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடை களை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனை பெறமுடியாது.