ஒவ்வொரு நாளும் 80,000 பக்தர்கள் தற்போது ஏழுமலையானை வழிபடுகின்றனர். இந்த நிலையில் இலவச தரிசனத்திற்காக நாள் கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 22 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபடலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளது. அதேபோல் வியாழக் கிழமைகளில் திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ள ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.