ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » வைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலையில் தங்க தேரில் வலம் வந்த ஏழுமலையான்..! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலையில் தங்க தேரில் வலம் வந்த ஏழுமலையான்..! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
vaikunda ekadasi | வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் தங்க தேரோட்டம் இன்று கோலாகமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையானின் தங்க தேரோட்டம் திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
2/ 8
தங்க தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்கத்தேர் மீது எழுந்தருளினார்.
3/ 8
அங்கு உற்சவர்களுக்கு தீப, தூப, நெய்வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.
4/ 8
தொடர்ந்து நடைபெற்ற பலி ஆகியவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
5/ 8
அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று விண்ணதிர கோஷம் எழுப்பி தங்கத்தேரில் எழுந்தருளிய ஏழுமலையானை வழிபட்டனர்.