திருப்பதி மலையில் கடந்த மூன்றாம் தேதி முதல் ஏழுமலையான் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடை பெறும் தெப்போற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தெப்பத்தில் எழுந்தருளி பக்கர்களுக்கு அருள் பாலித்தார்.