திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 2ஆம் நாள் தெப்ப உற்சவம். ருக்மணிதேவி சமேத கிருஷ்ணர் அலங்காரம் பூண்டு தெப்போற்சவம் கண்டருளினார் மலையப்பசுவாமி.
2/ 7
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப உற்சவம் கடந்த 13 ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று உற்சவர் மலையப்ப சுவாமி ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி உற்சவம் கண்டருளினார்.
3/ 7
இதனை முன்னிட்டு ருக்மணி தேவி சமேத கிருஷ்ணராக கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்பசுவாமி ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் தெப்பக் குளத்தை அடைந்து அங்கு தெப்பத்தில் எழுந்தருளினார்.
4/ 7
தொடர்ந்து ஐந்து சுற்றுகளாக தெப்பம் வலம் வந்த நிலையில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
5/ 7
உற்சவர் மலையப்ப சுவாமி ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
6/ 7
3-வது நாளான இன்று மாலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிப்பார்.
7/ 7
இந்நிலையில் தெப்ப உற்சவத்தையொட்டி வரும் 17-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.