முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

tirupati | இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாள். அப்படிப்பட்ட திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • 112

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    திருப்பதி பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம். அந்த மாதத்தில்தான் பெரும்பாலானோர் பெருமாளை தரிசிக்க திருப்பதி செல்வார்கள். திருப்பதி என்றால் பெருமாள் மட்டும்தான் சிறப்பு என்றில்லை. அதையும் தாண்டி சில சிறப்பான விஷயங்களும் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 212

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப் பால், நெய், மோர் , தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்படுகின்றன. அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது. இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததில்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 312

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியில் சிலவற்றை இழந்துள்ளார். இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி  தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டுள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்குக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 412

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பலருக்கும் திருப்பதி பெருமாள் சிலை சன்னதியின் நடுவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 512

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்துக்கேட்டால் கடல் அலை சத்தம் கேட்பதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் பார்க்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 612

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரியும் மண் விளக்குகள் ஒரு போதும் அணைந்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. அது எப்போது ஏற்றப்பட்டது குறித்த பதிவு இல்லை என்றாலும் ஏற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை அணைந்ததே இல்லை.

    MORE
    GALLERIES

  • 712

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அங்கிருந்த மன்னன் குற்றம் செய்த தண்டனைக்காக 12 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை விதித்துள்ளார். பின் அவர்கள் இறந்த பிறகு உடலை திருப்பதி கோவிலின் சுவற்றில் கட்டியுள்ளார். இதனை பொருத்துக்கொள்ள முடியாமல் பெருமாள் நேரடியாகத் தோன்றி தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 812

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    விக்கிரத்தின் பின்புறம் எப்போதும் ஒருவித ஈரப்பதமும், தண்ணீர் ஊற்றியபடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆய்வுகள் செய்தும் அதன் காரணத்தை அறிய முடியவில்லை என்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 912

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பெருமாளுக்கு சார்த்தப்பட்ட மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்த பின் அவற்றை அர்சகர்கள் கர்பகுடி அல்லது கருவறை கூடையில் போடுவதில்லை. மாறாக கோவிலின் பின் பக்கத்தில் அமைந்துள்ள அருவியில் கொட்டுகின்றனர். அப்படி கொட்டும் பூக்களை ஒருபோதும் அவர்கள் அங்கு பார்த்ததில்லையாம். அவை அனைத்தும் கோவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றனவாம்.

    MORE
    GALLERIES

  • 1012

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    பச்சை கற்பூரம், கற்பூரம் என எந்த வகை கற்பூரமாக இருந்தாலும் அதை ஒரு கல்லில் வைத்து தொடர்ந்து ஏற்றினால் அல்லது அதன் காற்று பட்டாலே அந்த கல் விரிசில் அல்லது பிளவை உண்டாக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் திருப்பதி சிலையில் இன்றளவும் எந்த விரிசல், பிளவுகளும் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கான எந்த அடையாளங்களுமே இல்லை என்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1112

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேளையாக வைத்திருக்கின்றார்கள்.

    MORE
    GALLERIES

  • 1212

    திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்.. திருப்பதி குறித்து பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்...!

    சிலையில் வியர்வை : பெருமாளின் சிலை வெறும் கல்லாகப் பார்ப்பதில்லை. மக்களோடு ஒன்றினைந்து வாழ்ந்த தெய்வத்தின் உருவம். அதற்கு சிறந்த உதாரணம்தான் சிலையின் முகத்தில் வடியும் வியர்வை. ஆம், சிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட்டில் செங்குத்து நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் 3000 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றிலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. சிலைக்கு தினமும் அபிஷேகம் என்று சொல்லப்படும் புனித நீராடலும் செய்யப்படுகிறது. இருப்பினும் அவரின் முகத்தில் வியர்வை வடிவதாகக் கூறப்படுகிறது. அந்த வியர்வை கூட சில்க் துணியால் மட்டும் துடைப்பார்களாம். இதற்கென ஒரு அர்ச்சகரே இருக்கிறார்.

    MORE
    GALLERIES