மீண்டும் புத்துயிர் பெற்ற திருப்பதி ஏழுமலையான் தாயார் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் - புகைப்படங்கள்
Tirupati | புனரமைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் தாயார் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கலந்துகொண்டு தாயாரை வழிபட்டார்.
திருப்பதி அருகே பேரூரில் இருக்கும் குன்றின்மேல் புனரமைக்கப்பட்ட வகுளாதேவி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. பின்னர் அங்கு வந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வகுளாதேவியை வழிபட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
2/ 18
திருப்பதி அருகே உள்ள பேரூரில் இருக்கும் குன்று ஒன்றின்மேல் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலையானின் வளர்ப்பு தாயார் ஆன வகுளாதேவிக்கு கோவில் எழுப்பப்பட்டது.
3/ 18
அதன் பின்னர் இஸ்லாமியர் ஆட்சி காலத்தில் அந்த கோவில் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டு வகுளாதேவியின் சிலை உடைக்கப்பட்டது.
4/ 18
தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த குன்றை உடைத்து அதில் இருந்து கிடைக்கும் கற்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
5/ 18
இதனால் அந்த கோவில் முழுவதுமாக அழிந்து போனது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வகுளாதேவி கோவிலை மீண்டும் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஏற்பட்டது.
6/ 18
ஆனால் அந்தப் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் கோவில் கட்டுவதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.
7/ 18
அதனை தொடர்ந்து கோவிலை கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டியின் நிதி உதவியுடன் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கோவில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச திருமலை திருப்பதி தேவஸ்தானம் 20 கிலோ தங்கத்தை வழங்கியது.
8/ 18
இந்த நிலையில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த 18ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் எட்டு மணி முதல் எட்டரை மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
9/ 18
அப்போது வேத பண்டிதர்கள் கோவில் தங்க கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
10/ 18
பின்னர் பகல் 11 மணி அளவில் அங்கு வந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வகுளாதேவி வழிபட்டு சென்றனர்.
11/ 18
கோவிலுக்கு வந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு தேவஸ்தான உயரதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
12/ 18
இந்த நிலையில் வகுளாதேவி கோவில் அமைந்திருக்கும் குன்றின் கீழ் இருக்கும் பகுதியில் தேவஸ்தான நிர்வாகம் கல்யாண மண்டபம், ஓய்வு விடுதிகள் ஆகிய உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்ய உள்ளது.
13/ 18
திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்பு தாயாரான வகுளாதேவி அவரை வளர்த்து வந்த காலத்தில் மிக சிறப்பான முறையில் உணவு சமைத்து வழங்கியதாக கூறப்படுகிறது.
14/ 18
மேலும் தன்னுடைய மகனுக்காக சமைக்கும்போது சமையலில் எவ்விதமான குற்றமோ குறையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்.
15/ 18
இப்போதும் அரூபியாக வாழும் வகுளாதேவி திருப்பதி மலையில் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்வதற்காக சமைக்கப்படும் பிரசாத தயாரிப்பை கவனித்து வருவதாக ஐதீகம்.
16/ 18
எனவேதான் ஏழுமலையான் கோவிலில் உள்ள பிரசாத தயாரிப்பு மண்டபத்திற்கு எதிரே வகுளாதேவியின் திருவுருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
17/ 18
பிரசாதம் தயாரிக்கும் மண்டபத்தின் சுவற்றில் உள்ள துளை வழியாக வகுளாதேவி பிரசாத தயாரிப்பை கண்காணித்து வருவதாக ஐதீகம்.
18/ 18
இதன் மூலம் இன்றும் தன்னுடைய மகனுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியம் எவ்விதமான குற்றம் குறைபாடு இல்லாமல் தயார் செய்யப்படுகிறதா என்பதை அவர் கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.